கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கியது.

Update: 2023-09-02 21:00 GMT

கும்பகோணம்;

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கியது.

நுழைவு வாசல்கள்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்துக்கும் மாநகர பஸ் நிலையத்துக்கும் ஒருவழியாக பஸ்கள் வந்து மற்றொரு வழியாக பஸ்கள் செல்லும் வகையில் தலா 2 நுழைவு வாசல்கள் உள்ளன. இதனால் பஸ்கள் ஒருவழியாக வந்து மற்றொரு வழியாக செல்கின்றன. கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படும். இருப்பினும் வடிகால் வசதி சரிசெய்யப்படவில்லை. இந்த நிலையில் கும்பகோணத்தில் கடந்த 30- ந் தேதி பெய்த கனமழையால் பஸ்நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி காணப்பட்டதால், குளம் போல் காட்சி அளித்தது.இதனால் சென்னை, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடம் முழுவதும் தண்ணீர் தேங்கி பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் பஸ்நிலையத்தின் உள்ேள சென்ற இருசக்கர வாகனங்களின் என்ஜினில் தண்ணீர் சென்றதால் வாகனத்தை இயக்க முடியாமல் தவித்தனர்.

45 கடைகள் அகற்றம்

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. புதிய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். மேலும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தபட்டது. இனி வரும் காலங்களில் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத 45 கடைகளை இடித்து அப்புறப்படுத்தபட்டது.கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் கடைகளை காலி செய்துவிட்டு வியாபாரிகள் சென்றனர். அந்த கடைகள் திறந்தவெளி சிறுநீர் கழிவறையாக இருந்ததால் தற்போது கடைகள் அகற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வடிகால் வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டு குப்பைகள் நிரம்பாதவாறு சிமெண்டு கொண்டு அமைக்கபட்டு தேப்பெருமாநல்லூர் வடிகாலுடன் சேரும் வகையில் தூர்வாரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்