சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்
சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்
குன்னத்தூர்
குன்னத்தூர் பெருந்துறை ரோட்டில் அத்திக்கடவு அவினாசி திட்ட பணி நடைபெற்று ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரோட்டில் மழை நீர் தேங்கும் நீரை வெளியேற்ற வழியில்லை. குன்னத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் கனமழை பெய்தது. இந்த மழை நீர் ஆனது வெளியே செல்லாமல் ரோடு ஓரத்தில் 500 மீட்டர் நீளத்திற்கு அப்படியே தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். ரோடு ஓரத்தில் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் அப்படியே ஒதுங்கினாலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மழை நீரை இறைத்து சென்று வந்து. ஆகவே அதிகாரிகள் உடனடியாக மழை நீர் வெளியேற வடிகால் கட்டி தருமாறு இப்பகுதி சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.