ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

காட்டுப்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2022-12-14 18:28 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த காட்டுப்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில், மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இந்தவழியாக பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் மாற்றுப்பாதை இன்றி உயிரை பணயம் வைத்து தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே ெரயில்வே நிர்வாகம் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்