எரிவாயு தகன மேடையை சுற்றி குளம்போல் தேங்கிய மழைநீர்
திருப்பத்தூர் நகராட்சி எரிவாயு தகன மேடையை சுற்றி குளம்போல் தேங்கிய மழைநீரால் துர்நாற்றம் வீசுகிறது.
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றிலும் ஒரு அடி அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைகளை மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை முழங்கால் தண்ணீரில் தூக்கி சென்றும் இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இறுதிச் சடங்கு வருபவர்கள் அங்கு நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல முறை நகராட்சிக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எரிவாயு தகன மேடையின் நுழைவுவாயிலில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.