வறண்ட ஏரிகளில் தண்ணீர் தேங்கியது

சேதுபாவாசத்திரம் கடைமடையில் கொட்டித்தீர்த்த கனமழையால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-07-23 21:17 GMT

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் கடைமடையில் கொட்டித்தீர்த்த கனமழையால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வறண்ட குளங்கள்

கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் மேட்டூர் அணைைய அடைந்து அங்கிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.இருப்பினும் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு 5நாட்கள் வீதம் முறை வைத்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது இதனால் கடைமடை விவசாயிகள் இன்றுவரை விதை நெல்லை கையில் எடுக்கவில்லை. மேலும் 10-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளும் சுமார் 400- க்கும் மேற்பட்ட சிறு குளங்களும் நிரம்பாமல் வறண்ட நிலையிலேயே இருந்து வந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணை திறந்தால் மழை பெய்யும் என்ற வழக்கம் மாறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியில் மழையின்றி வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே கடைமடை பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கினால் நாற்றுவிடும் பணிகளையும் சாகுபடி பணிகளையும் தொடங்கிவிடலாம் என கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்