சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Update: 2022-08-29 16:45 GMT


உடுமலையில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

உடுமலையில் மழை

உடுமலையில் நேற்று காலையில் வெயில் அடித்தது. இந்த நிலையில் மதியம் மேகமூட்டம் காணப்பட்டது. மதியம் 2 மணிக்கு பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் தளிசாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தளிசாலை-பொள்ளாச்சி சாலை சந்திப்புக்கு சென்று சேர்ந்தது. அதனால் அந்த பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் ஓடியது.

உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே இருந்து பழைய பஸ்நிலையம் வழியாக திருப்பூர் சாலை சந்திப்பு வரை பொள்ளாச்சி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

கழிவுநீர்

அதனால் அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மழை வெள்ளம் ஓரளவு குறைந்த பிறகே இருசக்கர வாகனங்கள் சென்றன.

மத்திய பஸ்நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.சில இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிறைந்து கழிவுநீர்வெளியேறி மழைநீருடன் கலந்து சென்றது. அதனால் பொதுமக்கள் மழைநீரில் கால் வைத்து நடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்