மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்

Update: 2023-10-11 17:00 GMT


வெள்ளகோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை மழைநீரானது வடிகாலுக்குள் இழுத்து சென்று அடைப்புகள் ஏற்பட்டது.

 இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இதனால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் பொதுமக்களுக்கு சிரமமாகவும் இருந்தது. இதனால் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக தூர்வாரும் பணியை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வெள்ளகோவில் புறநகர் பகுதியில் உள்ள கால்வாய், கழிவுநீர் நீர்த்தேக்கம், குப்பைகளால் ஏற்பட்ட அடைப்பு அகற்றப்பட்டது. புறநகர் பகுதியில் தூர்வாரும் பணியானது நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தூய்மை பணியாளர்களை கொண்டு செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்