போடி அருகே மழையால் உருக்குலைந்த மலைப்பாதை

போடி அருகே சீரமைத்த 2 மாதங்களில் மலைப்பாதை உருக்குலைந்தது

Update: 2022-07-31 16:06 GMT

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் முதுவாக்குடி மலை கிராமம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குரங்கணியில் இருந்து இந்த கிராமத்துக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது. நாளடைவில் இந்த பாதை பராமரிக்கப்படாததால் பல ஆண்டுகளாக உருக்குலைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.10 லட்சம் செலவில் இந்த மலைப்பாதை சீரமைக்கப்பட்டது. பாதை சீரமைப்பு பணி நடந்த போது பாதையின் ஓரத்தில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் மழை நீர் வடிகால் அமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக போடி மலைப்பகுதியில் மழை பெய்தது. இந்த தொடர் மழை எதிரொலியாக இந்த மலைப்பாதை சேதமடைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. சீரமைக்கப்பட்ட பாதை பல இடங்களில் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு பள்ளமாக காட்சியளிக்கிறது. சீரமைத்து 2 மாதங்களே ஆன நிலையில், கடந்த சில நாட்கள் பெய்த மழைக்கு கூட மலைப்பாதை தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் மக்கள் மீண்டும் பழைய பரிதவிப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்