சென்னையில் மழை எதிரொலி: விமான சேவை பாதிப்பு

சென்னையில் கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Update: 2023-08-14 01:52 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், கனமழை எதிரொலியாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சார்ஜா, துபாய் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மேலும் துபாய், மும்பை, பாரீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட விமானங்கள் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்