மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான உபகரணங்கள்

மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான உபகரணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

Update: 2022-11-01 17:26 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக காவல்துறை சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் காணப்படும் பொதுமக்களை பத்திரமாக வேறு பகுதிக்கு கொண்டு செல்ல 20 போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவினருக்கு மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி கயிறு, மண்வெட்டி, கத்தி, கடப்பாரை, மரம் அறுக்கும் கருவி உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசனைகள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்