கழுகுமலை:
கழுகுமலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. மாலை 2 மணி முதல் வெயில் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. சுமார் 3 மணியளவில் திடீரென்று இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகியுள்ளது.