தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
அதாவது நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.