சென்னையின் பல்வேறு இடங்களில் லேசான மழை...!

சென்னையின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

Update: 2023-10-16 01:57 GMT

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை லேசான மழை பெய்தது. அடையாறு, எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, எழும்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்