சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை...!

சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-10-15 01:38 GMT

சென்னை,

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இரவில் கனமழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்