கனமழையால் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

தாராபுரம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

Update: 2022-11-14 18:18 GMT


தாராபுரம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

நெல் சாகுபடி

அமராவதி ஆற்றின் பிரதான கால்வாயில் 25 ஆயிரம் ஏக்கரும், பழைய வாய்க்காலில் 25ஆயிரம் ஏக்கரும் பாசனம் வசதி உள்ளது. இந்த பகுதியில் சின்னபுத்தூர் வட்டார பகுதியில் 23 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் சின்னபுத்தூர் பகுதியில் ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இது குறித்து சின்ன புத்தூர் சின்ன புள்ளவயல் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் செல்லமுத்து, வி.மயில்சாமி, கோமதி ஆகியோர் கூறியதாவது:-

தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகள் செய்திருந்தோம். வாய்க்கால்கள் முறையாக தூர்வார படாததால் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு நாற்று நட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும் வாய்க்கால்களை முறையாக தூர்வாராமல் பொதுப்பணித்துறையினர் விட்டு விட்டதால் வாய்க்காலில் பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் தற்போது தண்ணீர் வடிந்து செல்ல முடியாமல் வயல்களில் தேங்கி உள்ளது. உடனடியாக வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

தாராபுரம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மேலும் தண்ணீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் வடிந்த பிறகு மீண்டும் நடவு செய்ய வேண்டி உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நடவு நட்ட பிறகு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்ததால் நடவு பணி முடிந்து இன்சூரன்ஸ் நடைமுறையை பதிவு செய்வதற்குள் திடீரென தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அமைச்சர்கள் சின்னபுத்தூர் கிராம பகுதிகளுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்