வால்பாறையில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-06-30 18:45 GMT

வால்பாறை

தென் மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கிய போதும் தமிழகம் மற்றும் கேரளாவில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் புயல் காரணமாக தென் மேற்கு பருவமழை பாதிப்படைந்து தீவிரமடையாமல் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் லேசான காற்றுடன் மழை பெய்தது. இதனால் 35 மற்றும் 36 -வது கொண்டை ஊசி வளைவு சாலைக்கு அருகில் அதிகாலை 4 மணியளவில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரம் முறிந்து சாலையில் விழுந்து கிடந்ததால் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதை சாலையில் எவ்வித வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சாலை ஆய்வாளர் பெருமாள் தலைமையில் சாலைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையோரத்தில் விழுந்த மரத்தை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் ஒதுக்கி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் சிறிது நேரம் மட்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்