வள்ளியூர் பகுதியில் மழை

வள்ளியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.;

Update: 2023-04-03 19:48 GMT

தெற்கு கள்ளிகுளம்:

வள்ளியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வள்ளியூர், தெற்கு கள்ளிகுளம், ஆனைகுளம், சித்தூர், புதூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதில் தெற்கு கள்ளிகுளத்தில் மழைவெள்ளம் சாலை வழியாக ஓடி அதன் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் செல்லமுடியாமல் காமராஜர் நடுநிலைப் பள்ளி அருகே தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். வள்ளியூரிலும் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்