திருச்சியில் மழை

திருச்சியில் மழை பெய்தது.

Update: 2023-08-31 20:10 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை நேரத்துக்கு பிறகு குளிர்ந்த காற்றுவீசியது. பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது. இதனால் பகலில் இருந்த வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கல்லக்குடி-2.2, பொன்னையாறுஅணை-1, புலிவலம்-1, தா.பேட்டை-7, கொப்பம்பட்டி-4, தென்பரநாடு-49, துறையூர்-28. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 3.84 மில்லி மீட்டரும், ஒட்டு மொத்தமாக 92.2 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்