ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் பகல் முழுவதும் வெயில் காணப்பட்ட நிலையில் மாலையில் திடீரென மேகமூட்டம் சூழ்ந்து பலத்த காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. தெருக்களின் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீருடன், கழிவு நீர் வெளியேறி தூர்நாற்றம் வீசியது. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.