ராஜபாளையம்,
ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்தது. மேலும் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பெய்த சாரல் மழையால் மழை நீர் தேங்கி இருந்தன. சில தெருக்களில் சாலைகள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி இருந்தன. அதேபோல சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சமுசிகாபுரம், சங்கரபாண்டியாபுரம், சேத்தூர், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம், புத்தூர், புனல்வேலி, முகவூர், தேவதானம், கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.