புள்ளம்பாடி பகுதியில் மழை

புள்ளம்பாடி பகுதியில் மழை பெய்தது.;

Update:2023-05-04 01:10 IST

கல்லக்குடி:

புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதைெயாட்டி இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்த மழையால் இன்னிசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. முன்னதாக தேரோட்ட நிகழ்வின்போதும் மழையால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவிழாவையொட்டி விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட தரைக்கடைகள் அமைத்து, வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் மழையால் அவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.மேலும் புள்ளம்பாடி பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டுவிட்டு சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கல்லக்குடி பகுதியில் மழையால் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்