பொன்னமராவதி, காரையூரில் மழை

பொன்னமராவதி, காரையூரில் மழை பெய்தது.

Update: 2022-06-02 19:00 GMT

பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளான தொட்டியம்பட்டி, வேந்தன்பட்டி, கொப்பனாப்பட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, தூத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல் காற்றுடன் மழை பெய்தது. இதனால் கொப்பனாப்பட்டி-கொன்னைப்பட்டி சாலையோர மரங்களின் கிளை உடைந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்தினர்.

இதேபோல் வலையப்பட்டி 2 நம்பர் சாலை, அடைக்கண் ஊரணி செல்லும் சாலையில் உள்ள மரக்கிளையும் சாலை நடுவே ஒடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக அகற்றினர்.

காரையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, காரையூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்