நாகை மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை அதிகபட்சமாக திருக்குவளையில் 126 மில்லி மீட்டர் மழை பதிவானது

நாகை மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருக்குவளையில் 126 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2022-09-01 16:27 GMT

நாகை மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருக்குவளையில் 126 மில்லி மீட்டர் மழை பதிவானது.

பரவலாக மழை

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் விளை நிலங்களில் தேங்கி உள்ள மழை நீரை விவசாயிகள் வடியவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழையின் காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. மேலும் 2 நாட்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீர் வரத்து கண்காணிப்பு

கன மழை நீடிப்பதால் ஆறுகளில் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ஆறுகள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய 1,500 சவுக்கு மரங்கள், 4,700 மணல் மூட்டைகள், 65 ஆயிரம் காலி சாக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

நாகை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் திருக்குவளையில் அதிகபட்சமாக 126 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:-

திருப்பூண்டி-27, தலைஞாயிறு 26, வேளாங்கண்ணி- 25, வேதாரண்யம்- 12, நாகை-11.

Tags:    

மேலும் செய்திகள்