காரையூர்:
காரையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலத்தானியம், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, நல்லூர், இடையாத்தூர், அரசமலை, காரையூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் திடீரென மழை பெய்தது. இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இந்த மழையினால் குளிர்ந்த காற்று வீசியது.