காரைக்குடி, திருப்புவனம் பகுதியில் மழை

காரைக்குடி, திருப்புவனம் பகுதியில் மழை பெய்தது.

Update: 2023-07-10 19:30 GMT

காரைக்குடி, திருப்புவனம் பகுதியில் சாரல் மழை பெய்தது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை உள்ளிட்ட பல பகுதியில் மாலை நேரங்களில் அவ்வப்போது திடீரென சாரல் மழை பெய்தது. இரவு நேரங்களில் குளுமையான நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் மதியம் வரை வெப்ப சலனமாக இருந்தது. பின்னர் திடீரென மாலை 5 மணிக்கு வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இந்த நிலையில் 6 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. அப்போது இடி மற்றும் மின்னலும் இருந்ததால் காரைக்குடி பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்புவனம் பகுதிகளி லும் நேற்று மாலை 1மணி நேரம் மழை பெய்தது. மின்வெட்டும் ஏற்பட்டது. எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, குன்னத்தூர், பிரான்பட்டி பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய லேசான சாரல் மழை இரவு வரை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியே குளிர்ந்து காணப்பட்டது. பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் மாலை நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாலைக்கிராமம்

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வலசைகாடு, குயவர் பாளையம், சமுத்திரம், துகவூர், முத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்