ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்தது. அதைத்தொடர்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் இரவு 7 மணிக்கு இடி -மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இரவு 9.30 மணி வரை விட்டு விட்டு பெய்தது.
இதனால் ஈரோடு மீனாட்சிசுந்தரனார் ரோடு, முனிசிபல் காலனி, பெரியவலசு, பன்னீர்செல்வம் பூங்கா, பழையபாளையம், செங்கோடம்பள்ளம், பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, வீரப்பன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் ரோட்டில் சென்றதால் வாகனம் ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் சில இடங்களில் மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து ரோட்டில் சென்றதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.