சின்னசேலத்தில் மழை

சின்னசேலத்தில் மழை பெய்தது.

Update: 2022-06-14 16:39 GMT

சின்னசேலம்,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்று மாறுபாடு, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் சுட்டெரித்தது.

இந்நிலையில் மாலை 5.30 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. குளிர்ந்த காற்று வீசியது. அதன்பிறகு மாலை 6.45 மணியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் இடைவிடாமல் கொட்டிய மழையால் சாலைகளில் மழைநீர் ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் சின்னசேலம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்