பரவலாக மழை

திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் பரவலாக மழை

Update: 2022-07-02 17:58 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம் நட்சத்திரமாலை, ஆக்கூர், மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம் ஆகிய பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதேபோல் மயிலாடுதுறையில் காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. மழைக்காரணமாக மயிலாடுதுறை நகர், புறநகர் பகுதியிலும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்