அன்னவாசல்:
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அன்னவாசல், இலுப்பூர் சித்தன்னவாசல், குடுமியான்மலை, பரம்பூர் முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இந்த மழை இரவு வரை விட்டு விட்டு பெய்தது. மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முக்கண்ணாமலைப்பட்டியில் மாலை முதல் தொடர்ந்து பெய்த கன மழையால் வாரச்சந்தை பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.