மழையால் சேதமடைந்த பயிர்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்

கோவில்பட்டி அருகே மழையால் சேதமடைந்த பயிர்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

Update: 2022-12-03 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் கடந்த 28-ந் தேதி சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் சுமார் 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வில்லிசேரி கிராமத்திற்கு சென்று சேதமடைந்த மக்காச் சோள பயிர்களை பார்வையிட்டனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகள், எலுமிச்சை விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார் ஆகியோர் சேதமடைந்த மக்காச் சோள பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி. காப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

அப்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்