நாகை மாவட்டம் திருமருகல், திட்டச்சேரி, கட்டுமாவடி, சியாத்தமங்கை, ஆலத்தூர், சேஷமூலை, குத்தாலம், நரிமணம், ஏனங்குடி, திருப்புகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென திருமருகல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. மேலும் கோடை உழவுக்கு தேவையான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.