கோடை வெப்பத்தை தணித்த மழை

கோடை வெப்பத்தை மழை தணித்தது.

Update: 2023-04-25 19:45 GMT

தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கிய நாள் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்துவதைபோல் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. மின் விசிறிக்கு கீழே அமர்ந்திருந்தாலும் வெப்பக் காற்று வீசியது. இதனால் தஞ்சை மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்தாலும் பிற்பகலில் கருமேகங்கள் திரண்டு வந்தன. சிறிதுநேரத்தில் குளிர்ந்த காற்றுவீசியதுடன் தஞ்சையில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. கடந்த 2 நாட்களாகவே பெரிய மழை பெய்யப்போவதைபோல் கருமேகங்கள் திரண்டு வருவதும், லேசாக தூறிவிட்டு மக்களை ஏமாற்றம் அடைய செய்வதுமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பலத்த மழை பெய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்