நீடாமங்கலம் பகுதியில் பரவலாக மழை
நீடாமங்கலம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
நீடாமங்கலம் பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.கடும் கோடை வெப்பத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை சற்று குளிர்ச்சியூட்டியது. இருப்பினும் கோடை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், பருத்திப் பயிர்களும் இந்த மழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இடி, மின்னலுடன் கூடிய இந்த மழை காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.