பென்னாகரத்தில் ஆலங்கட்டி மழை

Update: 2023-05-20 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை பென்னாகரம் பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை பார்த்து சிறுவர்-சிறுமிகள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். சிலர் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து, ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடினர். கடந்த 10 நாட்களுக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்