காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊருணி, கண்மாய், ஆறு உள்ளிட்ட வைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் காரைக்குடி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாத நிலையிலும், சில இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக முத்துராமலிங்கத்தேவர் நகர் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி வள்ளி (வயது63) என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபுற சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக மூதாட்டி உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அந்த பகுதி கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று மூதாட்டிற்கு ஆறுதல் கூறி உதவி செய்தனர்.