தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

Update: 2022-07-28 17:43 GMT

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 38.4 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் பகுதி வாரியாக பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:- பாலக்கோடு- 38.4, அரூர்-4, பாப்பிரெட்டிப்பட்டி- 17, பென்னாகரம்- 29, ஒகேனக்கல்- 15, மாரண்டஅள்ளி- 16. மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு 17.1 மி.மீ. ஆகும். இந்த மழை காரணமாக விவசாய நிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால் பயிர் நடவு பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்