சேலத்தில் பலத்த மழை

சேலத்தில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-06-21 21:07 GMT

சேலம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. சேலத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலை 5 மணி அளவில் மேகமூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து லேசான மழை தூறல் விழுந்தது. பின்னர் மாலை 5.30 மணி அளவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 30 நிமிடம் இந்த மழை நீடித்தது. தொடர்ந்து இரவு 7 மணி வரை லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த திடீர் பலத்த மழையால் சேலம் கலெக்டர் அலுவலக சாலை, சீத்தாராம் சாலை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்