இடி, மின்னலுடன் பலத்த மழை
திருப்புவனம் பகுதியில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்யது.
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்யது.
மழை
திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகமாக வெயில் அடித்து வந்தது. நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்து உள்ளது.
மழை பெய்து கொண்டிருக்கும் போது பயங்கரமான இடியுடன் மின்னல் வெட்டியது. மழையால் கிராம பகுதிகள், சாலைகள், வயல்வெளி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் பள்ளமான பகுதியில் குளம்போல் தண்ணீர் நிறைந்து காட்சி அளிக்கிறது. இந்த பலத்த மழையால் குடிநீர் கிணறுகளில் நீர் மட்டம் உயர வாய்ப்புஉள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
நேற்று பெய்த மழையால் வெயில் வெப்பதாக்கம் குறைந்து குளுமை சூழ்ந்தது. மழை பெய்து கொண்டிருக்கும் போதே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.