நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து அன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 53 மி.மீட்டர் மழைப்பதிவானது.
இதனிடையே நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- குமாரபாளையம்-53, ராசிபுரம்-47, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-35, புதுச்சத்திரம்-24, மங்களபுரம்-20, மோகனூர் -20, திருச்செங்கோடு-18, நாமக்கல்-13, கொல்லிமலை செம்மேடு-10, எருமப்பட்டி-10, சேந்தமங்கலம்-4.