காங்கயம் பகுதியில் அரை மணிநேரம் கன மழை
காங்கயம் பகுதியில் நேற்று மாலை அரை மணிநேரம் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கயம் பகுதியில் நேற்று மாலை அரை மணிநேரம் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை பெய்தது
திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் சுமார் 4.30 மணி அளவில் லேசான தூறலாக பெய்த மழை வேகமெடுத்து கனமழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது.
இதே போல் காங்கயம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் பகல் முழுவதும் கடும் வெயிலால் அவதிப்பட்ட காங்கயம் பகுதி மக்களுக்கு நேற்று மாலை பெய்த மழை சற்று இதமாக இருந்தது. இந்த மழையால் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.