ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-17 19:00 GMT

தட்சிண ரெயில்வே ஊழியர்கள் யூனியன் மத்திய சங்கம் சார்பில் திண்டுக்கல் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிளை செயலாளர் காட்டுராஜா முன்னிலை வகித்தார். இதில் மண்டல செயலாளர் சிவகுமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் ராணுவ வீரர்களை ரெயில்வே கேட்மேனாக நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்