ரெயில் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

தஞ்சையில் பரவலாக பெய்த மழை காரணமாக ரெயில் நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது.

Update: 2023-05-02 20:54 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் பரவலாக பெய்த மழை காரணமாக ரெயில் நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது.

மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறிகளுடன் கருமேகங்கள் திரண்டு வந்தாலும் லேசாக சாரல் மழையாக பெய்துவிட்டு, மக்களை ஏமாற்றி சென்றது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் நுழைவு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

தடுப்புகள்

சிமெண்டு காரையை மறைத்து, அட்டைகளை கொண்டு மாடலாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்தபோது பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. இதையடுத்து அந்த பகுதிக்கு பயணிகள் யாரும் செல்லாத வகையில் இருக்கைகளை கொண்டே தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் நுழைவு பகுதியில் உள்ள ஒரு வாயிலை இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு நுழைவு வாயிலின் வழியாக மட்டுமே பயணிகள் சென்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்