தமிழகத்தில் ஏராளமான ரெயில்வே திட்டங்கள் நிறைவேற்றம் - கருப்பு முருகானந்தம்

பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான ரெயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.

Update: 2022-05-29 17:39 GMT

மன்னார்குடி:-

பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான ரெயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை இதுவரை 2 முறை குறைத்து விட்டது. தமிழக அரசு ஒரு முறை மட்டுமே விலையை குறைத்துள்ளது.

விலையை குறைக்கவில்லை

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததை போல பிற மாநில அரசுகளும் விலையை குறைத்து விட்டன. ஆனால் தமிழக அரசு இதுவரை விலையை குறைக்கவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக அரசாங்கங்கள் நடந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும். தமிழகத்தில் குடும்ப ஆட்சி முறை நீடித்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை தான் தமிழகத்துக்கும் ஏற்படும்.

ரெயில்வே திட்டங்கள்

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு ரெயில்வே திட்டங்களை தமிழகத்துக்கு அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தை காட்டிலும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தில் ஏராளமான ரெயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தற்போது 2 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பணக்காரர்கள் மட்டுமே படித்து வரும் கல்வியை புதிய கல்வி கொள்கையால் ஏழை, எளிய மக்களும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்