சுதந்திர தினத்தை முன்னிட்டு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனை
்சுதந்திர தினத்தை முன்னிட்டுஅரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
சுதந்திரதின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாடெங்கும் பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளையும், பார்சல் அலுவலகம், பயணிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றிலும் ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.