ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-06-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ெரயில் நிலையத்தில் ெரயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒடிசாவில் நடந்த ெரயில் விபத்தில் பலியான பயணிகளின் ஆத்மா சாந்தி அடைய ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் தீர்மானங்களை வலியுறுத்தி சங்கச் செயலாளர் தங்கவேல், மகளிர் அணி தலைவி பட்டம்மாள், ஓய்வு பெற்ற நிலைய அதிகாரி உதயசங்கர் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் மத்திய அரசின் மருத்துவமனை வசதிகள் அனைத்து நகரங்களிலும் இல்லாத காரணத்தினால், நிலையான மருத்துவ படி ரூ.1000-ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்த வேண்டும். பென்ஷன் விதிமுறைகளை முறைப்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ெரயில்வே ஓய்வூதியர் சங்க பொருளாளர் முருகையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்