ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ரெயில் நிலையம் முன்பு, சதன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளார் கணேஷ்குமார், பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டமானது, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். 50 வயது முடிந்த அல்லது 30 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தோரை திறமையின்மை என்ற பெயரால் கட்டாய ஓய்வு தரும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.