ரெயில்வேகேட் பராமரிப்பு பணிகள் தொடங்கியது

நீடாமங்கலம் ரெயில்வே கேட் தண்டவாள பராமரிப்பு பணி நேற்று இரவு தொடங்கியது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-05-28 17:45 GMT

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் ரெயில்வே கேட் தண்டவாள பராமரிப்பு பணி நேற்று இரவு தொடங்கியது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ரெயில்வே கேட்

நீடாமங்கலம் ரெயில்வேகேட் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என ரெயில்வே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இரவு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின. ரெயில்வே பொறியாளர்கள் மேற்பார்வையில் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் நெடுஞ்சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகை வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதிக்கு வந்து மன்னார்குடி சென்று மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

அதேபோல் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை வரை செல்லும் பஸ்கள் போன்ற வாகனங்கள் நீடாமங்கலம் வெண்ணாற்றுப்பகுதியில் திருப்பி விடப்பட்டு கொரடாச்சேரி லெட்சுமாங்குடி, மன்னார்குடி வழியாக செல்ல உள்ளன. கார்கள் நீடாமங்கலம் ரெயில்வே கேட்டை ஒட்டி உள்ள சிறு கீழ்ப்பாலம் வழியாக செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது. பராமரிப்பு பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்