முன்னறிவிப்பின்றி ரெயில்வே கேட் மூடல்

வாணியம்பாடி நியூடவுன் ரெயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2022-06-10 16:44 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி நியூடவுன் ரெயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

ரெயில்வே கேட் மூடல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து நியூடவுன் செல்லும் வழியில் ெரயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக பொதுமக்கள், மாணவ- மாணவிகள், வாகனஓட்டிகள் சென்றுவந்தனர். இந்தநிலையில் ெரயில்வே கேட் எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டது.

பராமரிப்பு பணிகளுக்காக இந்த ெரயில்வே கேட் சனிக்கிழமையும் மூடப்படும் என இங்கு பணியாற்றி வரும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ெரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக இருந்தால், முன்கூட்டியே அந்தத் துறையினரால் அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

பொதுமக்கள் அவதி

குறிப்பிட்ட நாட்களில் இந்த கேட் மூடப்பட்டுகிறது, பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, ெரயில்வேத் துறையால் அறிவிக்கப்படும். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரண்டு நாட்களாக ெரயில்வே கேட் மூடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் ரெயில்வே கேட் வரை வந்து அதன்பிறகு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இனிவரும் காலங்களிலாவது முறையாக ெரயில்வே துறையினர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்