சொலவம்பாளையம்-அரசம்பாளையம் இடையே ரெயில்வே கேட் மூடல்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சொலவம்பாளையம்-அரசம்பாளையம் இடையே ரெயில்வே கேட் மூடப்பட்டது.
கிணத்துக்கடவு
போத்தனூர்-பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதை செல்கிறது. இதில் சொலவம்பாளையத்தில் இருந்து அரசம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணி நேற்று நடைபெற்றது. இதன் காரணமாக அந்த ரெயில்வே கேட் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டது. ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்களை சீரமைத்த பின்னர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வழக்கமாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சொலவம்பாளையம் பகுதியில் இருந்து அரசம்பாளையம், காரச்சேரி, பனப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் கொண்டம்பட்டி வழியாக அரசம்பாளையம் சென்றனர்.