ரெயில்வே பாலம் கீழ்ப்பகுதியில் மயானத்திற்கு செல்லும் சாலையை அடைக்க கூடாது-ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சாத்தூரில் ரெயில்வே பாலம் கீழ்ப்பகுதியில் மயானத்திற்கு செல்லும் சாலை பகுதியை அடைக்க கூடாது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-31 18:40 GMT

சாத்தூர்

சாத்தூரில் ரெயில்வே பாலம் கீழ்ப்பகுதியில் மயானத்திற்கு செல்லும் சாலை பகுதியை அடைக்க கூடாது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயானப்பகுதிக்கு செல்லும் சாலை

சாத்தூர் வைப்பாற்றங்கரையில் ெரயில்வே மேம்பாலம் அடியில் மயானத்திற்கு செல்லும் சாலை பகுதியை ெரயில்வே நிர்வாகம் மூட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று சாத்தூர் நகர் மன்ற தலைவர் குருசாமி தலைமையில் அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த மயானத்தில் 15-க்கும் மேற்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இறுதிச் சடங்கை செய்து வருகின்றனர். இந்த மயானச்சாலையை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். சாத்தூர் மயான பகுதிக்கு அருகே நகராட்சி குப்பை கிடங்கும் செயல்பட்டு வருகிறது. மேலும் ெரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் இந்தச் சாலையை 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாற்றுப்பாதையாக பயன்படுத்தி நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

சிரமப்படும் நிலை ஏற்படும்

தற்போது இந்த பாதை அடைக்கப்பட்டால் தற்போது ெரயில்வே கேட் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதும் மயானத்திற்கு செல்ல மாற்று வழியின்றி நகர் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். சில மாதங்களுக்கு முன்பு இரட்டை ெரயில் வழி பாதை அமைக்கப்பட்ட போதும் கூட இந்த சாலை பயன்பாட்டில் இருந்து வந்தது. மேலும் ெரயில்வே பணியாளர்களுக்கும் இதுவே பிரதான சாலையாகவும் இருந்து வந்தது.

மக்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வரும் இந்த ெரயில்வே பாலத்தின் கீழ்ப்பகுதியில் செல்லும் பிரதான சாலையை மூடக்கூடாது என அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூடி தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ெரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமுதாய மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்